ஒற்றைப் பயன்பாட்டிற்கான பிளாஸ்டிக் (நெகிழி) மீதான தடை
January 2 , 2019 2428 days 1068 0
14 வகையான பிளாஸ்டிக் பொருட்களின் மீதான உற்பத்தி, வர்த்தகம் மற்றும் பயன்பாடு ஆகியவற்றின் மீதான தமிழ்நாடு அரசின் தடையாணையானது மாநிலத்தில் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 01 முதல் நடைமுறைக்கு வந்தது.
கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் உள்ள சட்டங்களை ஆய்வு செய்த பின், இங்கு யார் தடையை மீறுகிறார்களோ அந்த பயன்பாட்டாளர்கள் மீது அபராதம் விதிக்க அரசு முடிவு எடுக்கும்.
தடை செய்யப்பட்ட இந்த 14 வகையான பொருட்கள் மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் மொத்த பிளாஸ்டிக்கில் 5 சதவிகிதம் மட்டுமே ஆகும்.
ஏற்கனவே மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இரண்டு வருடங்களில் பல் அடுக்கு கொண்ட சுத்திகரிக்கப்பட முடியாத பிளாஸ்டிக்கின் பயன்பாடு மற்றும் உபயோகத்தினைத் தவிர்த்திட பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை (திருத்தம்) விதிகள் 2018 என்பதனை வெளியிட்டு இருக்கின்றது.