ஒலிகோமன்னேட் - உலகின் முதல் புதிய அல்சைமர் மருந்து
November 7 , 2019 2098 days 803 0
ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களில் அல்சைமர் நோய்க்குச் சிகிச்சை அளிப்பதற்கான மற்றும் அந்த நிலையை மாற்றியமைக்கும் ஆற்றலுடன் கூடிய ஒரே சிகிச்சையான உலகின் முதலாவது புதிய மருந்தான ஒலிகோமன்னேட் ஆனது சீன அரசாங்கத்தால் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
கடற்பாசியைத் தவறாமல் உட்கொள்ளும் வயதானவர்களிடையே அல்சைமர் நோய் குறைவாக இருப்பதால் அதன் மூலம் ஒலிகோமன்னேட் கண்டுபிடிப்பின் வளர்ச்சி ஈர்க்கப் பட்டது.
தற்போது அல்சைமர் நோய்க்கு என்று எந்த சிகிச்சையும் இல்லை.
இந்நோயை முதன்முதலில் ஜெர்மன் மருத்துவர் அலோயிஸ் அல்சைமர் 1906 ஆம் ஆண்டில் கண்டறிந்தார்.