இந்திய கடலோர காவல் படையானது சமீபத்தில் ஒலிவா நடவடிக்கையை துவங்கியது.
இது ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகளானது ஒடிசாவின் கஹிர்மாதா கடல் சரணாலயப் பகுதி, தேவி ஆற்று முகத்துவாரங்கள் மற்றும் ருஷிகுல்யா கடற்கரைப் பகுதியில் இனப்பெருக்கத்திற்காக சிறிது காலம் தங்கி பாதுகாப்பாக திரும்பிச் செல்வதை உறுதி செய்யும் வருடாந்திர பணியின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்டது.
இந்த ஆமை பாதுகாப்புத் திட்டமானது ஒடிசாவின் வனத்துறையின் ஒத்துழைப்புடன் நடத்தப்படுகிறது.