ஒளிக் கட்புல பாரம்பரிய தினத்திற்கான உலக தினம் - அக்டோபர் 27
October 27 , 2019 2256 days 670 0
யுனெஸ்கோவின் பொது மாநாடு 2005 ஆம் ஆண்டில் ஒளிக் கட்புல பாரம்பரியத்திற்கான உலக தினத்தை நினைவு கூருவதற்கு ஒப்புதல் அளித்தது.
பதிவு செய்யப்பட்ட ஒலி மற்றும் ஒளிக் கட்புல ஆவணங்களின் (திரைப்படங்கள், ஒலி மற்றும் காணொளிப் பதிவுகள், வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்) முக்கியத்துவம் மற்றும் அதனைப் பாதுகாத்தலில் உள்ள சவால்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டின் கருப்பொருள் "ஒலி மற்றும் படங்கள் மூலம் கடந்த காலத்தைத் தொடர்புபடுத்துங்கள்" என்பதாகும்.