TNPSC Thervupettagam

ஒளிராத மின்மினிப் பூச்சி இனங்கள்

October 12 , 2025 5 days 40 0
  • லாமெல்லிபால்போட்ஸ் குறும்பா மற்றும் லாமெல்லிபால்போட்ஸ் டெப்பிரசாமா ஆகிய இரண்டு புதிய ஒளிராத மின்மினிப் பூச்சி இனங்களானது நீலகிரி மாவட்டத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
  • தற்போது ஐந்து இந்தியாவில் பதிவாகியுள்ளதுடன், இந்தக் கண்டுபிடிப்பு ஆனது, அறியப் பட்ட லாமெல்லிபால்போட்ஸ் இனங்களின் மொத்த எண்ணிக்கையை 14 ஆக அதிகரிக்கிறது.
  • நீலகிரியின் பல்லுயிரியலைப் பாதுகாப்பதில் அவர்களின் பங்கிற்காகப் பழங்குடி இனமான குறும்ப பழங்குடியினரின் நினைவாக அவற்றிற்கு லாமெல்லிபால்போட்ஸ் குறும்பா எனப் பெயரிடப்பட்டது.
  • ஆராய்ச்சியாளர்கள் அர்னோப் சக்ரோவர்டி மற்றும் பனானி பட்டாச்சார்ஜி ஆகியோரின் பெற்றோருக்குக் கௌரமளிக்கும் விதமாக லாமெல்லிபால்போட்ஸ் டெப்பிரசாமா எனப் பெயரிடப்பட்டது.
  • லாமெல்லிபால்போட்ஸ் இனத்தில் இந்தியா, மியான்மர், நேபாளம் மற்றும் தாய்லாந்து முழுவதும் காணப்படும் ஒளிராத மின்மினிப் பூச்சிகள் அடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்