ஒவ்வொரு மாவட்டத்திலும் சமஸ்கிருத மொழி பேசும் மக்களைக் கொண்ட கிராமம்
August 8 , 2022 1110 days 519 0
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும், சமஸ்கிருத மொழி பேசும் மக்களைக் கொண்ட ஒரு கிராமத்தை உருவாக்க அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இந்தக் கிராமங்களில் வசிக்கும் குடிமக்களுக்கு, இந்தப் பழங்கால இந்திய மொழியை தினசரி தகவல் தொடர்பு ஊடகமாகப் பயன்படுத்துவதற்கு நிபுணர்களால் பயிற்சி அளிக்கப் படும்.
சமஸ்கிருத மொழியில் புலமை பெறுவதற்காக வேண்டி அவர்களுக்கு வேதங்கள் மற்றும் புராணங்கள் போன்றவை கற்பிக்கப்படும்.
பண்டைய இந்தியக் கலாச்சாரத்தின் மையமாக விளங்கும் இந்தக் கிராமங்கள் ஒவ்வொன்றும் "சமஸ்கிருத கிராமம்" என்று அழைக்கப்படும்.