ஓசோன் அடுக்கைப் பாதுகாப்பதற்கான சர்வதேச தினம் - செப்டம்பர் 16
September 17 , 2022
1023 days
385
- ஓசோன் படலத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்தத் தினமானது கொண்டாடப்படுகிறது.
- ஓசோன் என்பது பூமியின் வளிமண்டலத்தில் உள்ள ஒரு பாதுகாப்பு அடுக்கு ஆகும்.
- இது சூரியனிலிருந்துப் பூமியை அடையும் புற ஊதா கதிர்வீச்சின் பெரும்பகுதியை உறிஞ்சுகிறது.
- இது சுமார் 10 கிமீ (6.2 மைல்) உயரத்தில் ஓசோனின் அதிகச் செறிவைக் கொண்டு அமைந்துள்ளது.
- உலக ஓசோன் தினம் முதன்முதலில் 1995 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
- 2022 ஆம் ஆண்டிற்கான உலக ஓசோன் தினத்தின் கருத்துரு, 'பூமியில் உயிர்களைப் பாதுகாப்பதற்கான உலகளாவிய ஒத்துழைப்பு' என்பதாகும்.

Post Views:
385