2024 ஆம் ஆண்டில் ஓசோன் துளை சமீபத்திய ஆண்டுகளை விட சிறியதாக இருந்ததாக உலக வானிலை அமைப்பு (WMO) தெரிவித்துள்ளது.
மான்ட்ரியல் நெறிமுறையின் கீழ் உலகளாவிய முயற்சிகள் ஆனது 99 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஓசோன் குறைப்பு பொருட்களை படிப்படியாக நீக்கியுள்ளன.
ஓசோன் படலமானது 2066 ஆம் ஆண்டில் அண்டார்டிகாவிலும், 2045 ஆம் ஆண்டில் ஆர்க்டிக்கிலும், 2040 ஆம் ஆண்டில் உலகளவில் 1980 ஆம் ஆண்டில் இருந்த நிலைகளுக்குத் திரும்பும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு அண்டார்டிக் ஓசோன் துளையானது தாமதமான தொடக்கத்தையும் விரைவான சீராக்கத்தினையும் காட்டியது என்பதோடு இது ஆரம்பகால மீட்பு அறிகுறிகளைக் குறிக்கிறது.
இந்த வெற்றிகரமான உலகளாவியச் சுற்றுச்சூழல் முயற்சிக்கு மான்ட்ரியல் நெறிமுறை மற்றும் வியன்னா உடன்படிக்கை ஆகியவை மதிப்பு சேர்க்கின்றன.
ஓசோன் நிலையின் தொடர் கண்காணிப்பு மற்றும் மாற்றுப் பயன்பாட்டு இரசாயனங்கள் அதன் நிலையான மீட்சியை உறுதி செய்வதற்கு அவசியமாக உள்ளது.
மான்ட்ரியல் நெறிமுறைக்கான கிகாலி திருத்தம், 2100 ஆம் ஆண்டிற்குள் புவி வெப்பம் அடைதலை 0.5°C ஆகக் கட்டுப்படுத்த ஹைட்ரோஃப்ளூரோகார்பன்களைக் குறைப்பதை இலக்காகக் கொண்டுள்ளது.
ஓசோன் படல மீட்சியானது தோல் புற்றுநோய், கண்புரை மற்றும் புற ஊதா கதிர்வீச்சினால் ஏற்படும் சுற்றுச்சூழல் சேதத்தின் அபாயங்களைக் குறைக்கிறது.