2,220 மெகாவாட் திறன் கொண்ட ஓஜு நீர்மின் நிலையத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியை வழங்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
இது சீன எல்லைக்கு அருகிலுள்ள டாக்சிங்கில் உள்ள சுபன்சிரி ஆற்றில் கட்டமைக்கப் பட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் ஆனது சுபன்சிரி நதிப் படுகையில் உள்ள நீர்மின் நிலையங்களில் மிகப்பெரிய ஆற்றல் உற்பத்தித் திறன் கொண்ட நிலையமாகும்.
இது சுபன்சிரி நதியின் மேல் மட்ட மாவட்டத்தில் உள்ள ரெடி கிராமத்தில், நதியின் கீழ் நோக்கிய ஓட்டத்தில் 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.