ஓட்டுநர் உரிமம், RC ஆகியவற்றின் மின்னணு நகல் சரிபார்ப்பு
October 3 , 2020 1768 days 733 0
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகமானது மத்திய மோட்டார் வாகனங்கள் சட்டம், 1989-ன் பிரிவு 139-ன் கீழ் ஒரு புதிய விதிமுறையைத் திருத்தியுள்ளது.
இது நாடு முழுவதும் உள்ள வாகன உரிமையாளர்கள் தங்களது ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழை மின்னணு முறையில் பயன்படுத்த அனுமதிக்கின்றது.
திருத்தப்பட்ட இந்த விதிமுறையின் படி, போக்குவரத்து தொடர்பாக தேவைப்படும் பதிவு, காப்பீடு, தகுதி மற்றும் அனுமதி, ஓட்டுநர் உரிமம், சோதனை செய்யப்பட்ட மாசு தொடர்பான சான்றிதழ் மற்றும் அது தொடர்பான இதர சான்றிதழ்கள் போன்றவற்றை அசல் மற்றும் மின்னணு வடிவில் (physical or electronic form) குடிமக்கள் பயன்படுத்த அனுமதிக்கின்றது.