மத்திய சாலைப் பாதுகாப்பு மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகமானது நாட்டில் போக்குவரத்து வாகன ஓட்டுநர்களுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை நீக்க முடிவு செய்துள்ளது.
தற்பொழுது 1989 ஆம் ஆண்டின் மத்திய மோட்டார் வாகன விதிமுறைகள் ஒரு வாகன ஓட்டுநர் எட்டாம் வகுப்பில் கண்டிப்பாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று கூறுகின்றது.
இந்த நடவடிக்கையானது நாட்டின் போக்குவரத்து மற்றும் தளவாடத் துறையில் இருக்கும் 22 இலட்சம் ஓட்டுநர்களின் பற்றாக்குறையைப் போக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.