TNPSC Thervupettagam

ஓபன் ஸ்கைஸ் ஒப்பந்தம் - ரஷ்யா விலகல்

June 12 , 2021 1503 days 639 0
  • ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அவர்கள் ஓபன் ஸ்கைஸ் ஒப்பந்தத்திலிருந்து ரஷ்யா விலகுவதை அதிகாரப்பூர்வமாக்கும் ஒரு சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
  • 2020 ஆம் ஆண்டில் அமெரிக்க நாடானது இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகியதைத் தொடர்ந்து இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • ஓபன் ஸ்கைஸ் ஒப்பந்தம் (திறந்த வான்வெளி) என்பது ஒப்பந்த நாடுகளுக்கு மற்றொரு நாட்டினுடைய இராணுவப் படைகளின் தகவல்களைச் சேகரிக்க அனுமதி வழங்கும் ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும். 
  • இது வெளிப்படைத் தன்மையை அதிகரிப்பதற்கான ஒரு ஒப்பந்தமாகும்.
  • ரஷ்யா இந்த ஒப்பந்தத்தை மீறியதாக கூறி 2020 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் அமெரிக்கா இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்