ஓபிசியின் துணை (உள்) வகைப்படுத்துதல் குறித்த ஆணையத்தின் காலநீட்டிப்பு
June 27 , 2020 1877 days 635 0
சமீபத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் துணை (உள்) வகைப்படுத்துதல் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் பதவிக் காலத்தை அடுத்த 6 மாத காலத்திற்கு, அதாவது 2021 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி வரை மத்திய அமைச்சரவை நீட்டித்துள்ளது.
தற்பொழுது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக எந்தவொரு உள் வகைப்படுத்துதலும் நடைமுறையில் இல்லை. 27% இடஒதுக்கீடு என்ற ஒரே மொத்த வகையிலான வகைப்படுத்துதல் மட்டுமே உள்ளது.
இந்த ஆணையமானது ஒய்வு பெற்ற நீதிபதி G. ரோகிணி என்பவரால் தலைமை தாங்கப் படுகின்றது.
இது இந்திய அரசியலமைப்பின் சரத்து 340ன் கீழ் 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 02 அன்று இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பின் 340வது சரத்தானது பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக வேண்டி ஆணையத்தின் நியமனத்திற்கான விதிமுறைகளை வழங்குகின்றது.