November 30 , 2021
1449 days
698
- உலக சுகாதார அமைப்பானது B.1.1529 என்ற SARS-CoV-2 மாற்றுருவினை ஒரு ‘கவலைக்கிடமான மாற்றுருவாக’ நிர்ணயித்துள்ளது.
- SARS-CoV-2 வைரசின் இந்த மாற்றுருவிற்கு ஓமைக்ரான் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
- இந்த மாற்றுருவானது தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானா பகுதியில் நவம்பர் 24 அன்று முதன்முதலில் கண்டறியப்பட்டது.
- தென் ஆப்பிரிக்காவில் பதிவான கோவிட்-19 தொற்றுகளின் அதிகரிப்பானது ஓமைக்ரான் என்ற மாற்றுரு கண்டுபிடிக்கப்பட்டதோடு ஒத்துப் போகிறது.
- நவம்பர் 09 அன்று சேகரிக்கப்பட்ட மாதிரியிலிருந்து ஓமைக்ரான் தொற்று முதலில் உறுதிப்படுத்தப்பட்டது.
- புதிதாகக் கண்டறியப்பட்ட மாற்றுருவானது அதிக அளவிலான சடுதி மாற்றத்தைக் கொண்டுள்ளது.
- சில சடுதி மாற்றங்கள் கவலை அளிக்கக் கூடியவையாக உள்ளன.

Post Views:
698