ஓய்வு பெற்ற அதிகாரிகளை நியமனம் செய்வதற்கான விதிமுறைகள்
June 9 , 2021 1528 days 618 0
ஓய்வு பெற்ற அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையிலோ (அ) ஆலோசனை சேவை (சுயவேலை) அடிப்படையிலோ நியமனம் செய்வதற்கு முன்னர் ஊழல் தடுப்புப் பிரிவின் நற்சான்றிதழைப் பெறுவதற்கான ஒரு வரையறுக்கப்பட்ட செயல்முறையை மத்திய ஊழல் தடுப்பு ஆணையமானது (Central Vigilance Commission – CVC) வகுத்து உள்ளது.
செயல்முறை
ஒருவரை நியமனம் செய்வதற்கு முன் அவர் எந்த வேலை நியமன அமைப்பிலிருந்து ஒய்வு பெற்றாரோ அந்த அமைப்பிலிருந்து நற்சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.
ஓய்வு பெற்ற அதிகாரி, ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களில் பணியாற்றியிருந்தால், அவர் ஓய்வு பெறுவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் பணியமர்த்தப்பட்ட அனைத்து நிறுவனங்களிடமிருந்தும் நற்சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.
அவற்றை வேண்டுவது தொடர்பான ஒரு தகவல் தொடர்பும் CVC அமைப்பிற்கு அனுப்பப் பட வேண்டும்.
அந்த அதிகாரி ஏதேனும் ஒரு ஊழல் சார்ந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தால் (அ) ஊழல் தடுப்பு ஆணையத்தினால் அதிலிருந்து விடுதலை செய்யப் படாதிருந்தால் பின்னர் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முந்தைய வேலை நியமன அமைப்பே பொறுப்பேற்க வேண்டும்.