தேசிய ஓய்வூதிய முறை (NPS) மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) ஆகியவற்றின் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கு LC75 மற்றும் BLC முதலீட்டு விருப்பத் தேர்வுகளை விரிவுபடுத்த அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
அரசு சாரா சந்தாதாரர்களுக்குக் கிடைப்பதைப் போன்ற பரந்த அளவிலான முதலீட்டு விருப்பத் தேர்வுகளுக்கான ஊழியர்களின் கோரிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தப் புதிய விருப்பத் தேர்வுகள், ஓய்வூதியத் திட்டத்தில் அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குவதையும், ஊழியர்கள் தங்கள் ஓய்வூதிய நிதியை தனிப்பட்ட விருப்பத் தேர்வுகளுக்கு ஏற்ப நிர்வகிக்க அனுமதிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
இதன் முக்கிய நன்மைகளில் அதிகரித்த நெகிழ்வுத்தன்மை, செயல்பாட்டு நெறிமுறை, விரிவாக்கப்பட்டத் தானியங்கி விருப்பத் தேர்வுகள் மற்றும் தகவலறிந்த நிதி திட்டமிடலுக்கான ஆதரவு ஆகியவை அடங்கும்.