1982 ஆம் ஆண்டின் இதே நாளில் தான், ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் ஓய்வூதிய நபர்களுக்கான பேரு மதிப்பு மற்றும் கண்ணியத்தை உறுதி செய்யும் வகையில் உச்ச நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியது.
இந்தச் சமூகத்திற்கு கண்ணியத்தையும் பெரு மதிப்பினையும் வழங்குவதற்காக பல ஆண்டுகளாகப் போராடிய மறைந்த D.S. நகரா அவர்களை நினைவு கூறும் விதமாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
1979 ஆம் ஆண்டில் மத்திய அரசினால் செயல்படுத்தப்பட்ட தாராளமய ஓய்வூதிய முறையானது ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஒப்பீட்டளவில் பயனுள்ளதாக இருந்தது.
இருப்பினும், இது 1979 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்குப் பிறகு பணி ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று வரம்பு நிர்ணயிக்கப்பட்டது.
இந்தப் பாகுபாட்டினை எதிர்த்து D.S. நகரா நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
உரிமையியல் நிறுவனங்களுக்கான அரசு ஆணையமானது 1881 ஆம் ஆண்டில் முதன் முதலில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியப் பலன்களை வழங்கியது.
1919 மற்றும் 1935 ஆம் ஆண்டுகளில் இயற்றப்பட்ட இந்திய அரசாங்கச் சட்டங்கள் மேற் கொண்ட விதிமுறைகளை உருவாக்கின.