2026 ஆம் ஆண்டு நவம்பர் 21 அன்று உலகளாவிய பெருங்கடல் கண்காணிப்பு அமைப்பிற்கான (GOOS) ஓஷன் ஐ (Ocean Eye) சர்வதேச கூட்டணியில் இந்தியா இணைந்ததுடன், இந்தியப் பெருங்கடல் முழுவதும் தனது கடல் கண்காணிப்பு வலையமைப்பை இரட்டிப்பாக்கவும் உறுதியளித்துள்ளது.
ஓஷன் ஐ சர்வதேச கூட்டணி என்பது பெருங்கடல் மற்றும் காலநிலை அமைப்புகளை மேம்பட்ட முறையில் புரிந்துகொள்வதற்காக கடல் கண்காணிப்பு, தரவுப் பகிர்வு மற்றும் கடல்சார் அறிவியலை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட GOOS உடன் தொடர்புடைய ஒரு உலகளாவிய கூட்டு முயற்சியாகும்.
GOOS-க்கு நீண்டகால நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவைத் திரட்டவும், உலகளாவிய கடல் கண்காணிப்பை வலுப்படுத்தவும் 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடாவால் இந்தக் கூட்டணி கூட்டாகத் தொடங்கப் பட்டது.
துருக்கியின் அன்டால்யாவில் நடைபெற்ற ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாட்டில் (COP31), பெருங்கடல்கள், கடல்கள், இயற்கை மற்றும் நிலப் பயன்பாட்டு தினத்தின் போது இந்தியா தனது இணைப்பை அறிவித்தது.
அல்பேனியா மற்றும் மான்டேரி பே அக்வாரியம் ஆராய்ச்சி நிறுவனம் (MBARI) ஆகியவையும் இந்தக் கூட்டணியில் இணைந்துள்ளன.