சவுதி அரேபியா 2025 ஆம் ஆண்டில் ஒரு பெரிய தொழிலாளர் சீர்திருத்தத்தில் அதன் 50 ஆண்டுகால கஃபாலா நிதியளிப்பு/ஸ்பான்சர்ஷிப் முறையை முடிவுக்குக் கொண்டு வந்தது.
இந்த அமைப்பு ஆனது தொழிலாளர்களின் குடியிருப்பு, சட்டப்பூர்வ அந்தஸ்து மற்றும் வேலை மாற்றங்கள் மீது முதலாளிகளுக்கு கட்டுப்பாட்டை வழங்கியது.
பல இந்தியர்கள் உட்பட சுமார் 1.34 கோடி புலம்பெயர்ந்தத் தொழிலாளர்கள் இதன் மூலம் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொழிலாளர்கள் தற்போது முதலாளியின் ஒப்புதல் இல்லாமல் தங்களது வேலைகளை மாற்றலாம் மற்றும் வெளியேறும் நுழைவு இசைவுச் சீட்டுகள் இல்லாமல் நாட்டை விட்டு வெளியேறலாம்.