ககன்யான் வீரர்கள் குழு பெட்டகத்திற்கான ட்ரோக் பாராசூட் தகுதிச் சோதனைகளை இஸ்ரோ நிறைவு செய்துள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கீழ் சண்டிகரில் உள்ள டெர்மினல் பாலிஸ்டிக்ஸ் ஆராய்ச்சி ஆய்வகத்தின் (TBRL) இரயில் பாதை ராக்கெட் இயக்க (RTRS) வசதியில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன.
பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும் போது ட்ரோக் பாராசூட்டுகள் ஆனது வீரர்களின் பெட்டகத்தினை நிலைப்படுத்தி அதன் வேகத்தினை குறைக்கின்றன.
ககன்யான் வேகக் குறைப்பு அமைப்பில் நான்கு வெவ்வேறு வகையான 10 பாரா சூட்டுகள் உள்ளன என்பதோடு, அவை ஒரு நிலையான வரிசையில் நிலை நிறுத்தப் படுகின்றன.
இந்தப் பணி மூன்று இந்திய விண்வெளி வீரர்களை மூன்று நாட்களுக்கு 400 கிமீ உயரத்தில் உள்ள புவியின் தாழ் மட்டச் சுற்றுப்பாதையில் அனுப்பி அவர்களை மிகவும் பாதுகாப்பாக பூமிக்குத் திருப்பி அனுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.