வளிமண்டல நுழைவுக் கட்டத்தில் விண்கல ஏவுதலின் போதான அவசர காலத்தின் போது விண்வெளி வீரர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக ககன்யான் கலம் விண்வெளி வீரர்கள் தப்பிக்கும் அமைப்பை (CES) பயன்படுத்த உள்ளது.
CES என்பது ஏவு வாகனத்தின் மேற்புறத்தில் வைக்கப்பட்டுள்ள ஓர் இழுப்பான் வகை அமைப்பாகும் என்பதோடு, இது எரிபொருள் வேகமாக பற்றும் திட மோட்டார்களைப் பயன்படுத்தி, முன்னேற முடியாத ஏவு வாகனத்திலிருந்து வீரர்கள் பெட்டகத்தினை வெளியே இழுக்கிறது.
இது ஏவு கலத்தினை விஞ்ச ஈர்ப்பு விசையில் 10 மடங்கு வரையிலான முடுக்கத்தினை உருவாக்க கூடியது என்பதோடுஇது அப்பெட்டகம் பாதுகாப்பான தொலைவினை விரைவாக அடைவதை உறுதி செய்கிறது.
ஏவு கலத்தில் இருந்து பிரிந்த பிறகு, கடலில் பாதுகாப்பான இறக்கத்திற்காக பல-நிலை கொண்ட பாராசூட் அமைப்பு விண்வெளி வீரர்கள் பெட்டகத்தின் வேகத்தினை மெதுவாக்குகிறது.
ஓர் உள்ளக ஒருங்கிணைந்த வாகனச் சூழல் மேலாண்மை (IVHM) அமைப்பு ஆனது இந்தச் செயல்பாட்டினைக் கண்காணித்து, முக்கியமானத் தோல்விகளின் போது CES அமைப்பினைச் செயல்படுத்துகிறது.