இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணமான 'ககன்யான்' தற்போது அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த முதலாவது மனித விண்வெளிப் பயணம் ஆனது, 2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் விண்ணில் ஏவப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
இஸ்ரோ நிறுவனமானது, இந்த ஆண்டின் தொடக்கத்தில் TV-D1 திட்டம் மற்றும் முதல் ஆளில்லா விண்வெளிப் பெட்டக வாகனப் பிரிப்புச் சோதனையை மிக வெற்றிகரமாக நிறைவு செய்தது.
இரண்டாவது விண்கல வாகனச் சோதனைத் திட்டமானது (TV-D2) 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மேற்கொள்ளப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது என்ற ஒரு நிலையில் அதைத் தொடர்ந்து ககன்யானின் ஆளில்லாச் சுற்றுக் கலங்களின் சோதனையானது மேற்கொள்ளப்படும்.
மனிதர்களைச் சுமந்து செல்லும் LVM3 வாகனம், விண்வெளி வீரர் குழு வெளியேறும் வசதி அமைப்பு மற்றும் விண்வெளி வீரர்கள் பயணிக்கும் பெட்டகம் மற்றும் சேவை வழங்கீட்டு பெட்டகம் ஆகிய அனைத்தும் தற்போது சோதனை மற்றும் அதற்கான ஒருங்கிணைப்பின் இறுதிக் கட்டங்களில் உள்ளன.
'ககன்யான்' ஆளில்லாச் சுற்றுக் கலமானது, இந்த ஆண்டின் பிற்பகுதியில் விண்ணில் ஏவப்பட உள்ளது.