January 1 , 2026
13 days
117
- கங்கர் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா என்பது சத்தீஸ்கரின் பஸ்தார் மாவட்டத்தில் ஜக்தல்பூருக்கு அருகில் அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாகும்.
- யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரிய பட்டியலில் இந்தப் பூங்காவைச் சேர்க்க சத்தீஸ்கர் அரசானது அதன் முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
- ஒப்புதல் அளிக்கப்பட்டதும், சத்தீஸ்கரில் இருந்து யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய அந்தஸ்தைப் பெறும் முதல் தளமாக இது மாறும்.
- சுமார் 200 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ள இந்தப் பூங்கா, கிழக்குத் தொடர்ச்சி மலைகள்-மத்திய இந்திய மலைப்பகுதிகளில் அமைந்துள்ளது.
- இது திரத்கர் நீர்வீழ்ச்சி, சுண்ணாம்புக் கல் குகைகள், அடர்ந்த காடுகள் மற்றும் வளமான பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு நன்கு அறியப்பட்டதாகும்.
Post Views:
117