இது கங்கை நதியைத் தேசிய நதியாக அறிவிக்கப்பட்டதின் 12வது நினைவு தினத்தைக் கொண்டாடுவதற்காக தேசியத் தூய்மை கங்கைத் திட்டத்தினால் அனுசரிக்கப் பட்டு வருகின்றது.
இந்த நிகழ்ச்சியானது மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சகத்தினால் அனுசரிக்கப் படுகின்றது.
இந்தியாவின் மிக நீளமான நதி கங்கை ஆகும்.
கங்கை நதியானது கங்கோத்திரி பனிப் பாறையில் இருந்து பாகீரதி நதியாக உற்பத்தி ஆகின்றது.
பின்னர் இது உத்தரகாண்டில் உள்ள தேவபிரயாக் என்ற இடத்தில் அலக்நந்தா நதியுடன் இணைந்து, கங்கையாக உருவெடுக்கின்றது.
இந்த நதியானது உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், பீகார், பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் பாய்கின்றது.
கங்கை நதியானது பிரம்மபுத்திரா நதியுடன் இணைந்து வங்க தேசத்தில் பத்மா என்ற நதியாகப் பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கின்றது.