TNPSC Thervupettagam

கங்கை டால்பின் சரணாலயம்

July 16 , 2019 2127 days 902 0
  • விக்ரமஷீலா கங்கை டால்பின் சரணாலயத்தில் (VGDS - Vikramshila Gangetic Dolphin Sanctuary) கங்கை நதி டால்பின்களைப் பாதுகாப்பதற்காகப் புதிய விதிமுறைகளை மத்தியக் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • VGDS ஆனது பீகாரின் கங்கை நதியின் மீது சுல்தான்கஞ்ச்சிலிருந்து காஹல்கஞ்ச் வரை பரவியுள்ளது. நாட்டில் உள்ள ஒரே டால்பின் சரணாலயம் இதுவாகும்.
  • மேற்கு வங்கத்தின் ஹால்டியாவையும் உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியையும் இணைக்கக் கூடிய தேசிய நீர்வழிப் பாதை – 1 ஆனது VGDS வழியாகச் செல்கின்றது.
  • கப்பல்களின் வேகக் கட்டுப்பாடு, நச்சுத் தன்மையற்ற சாயங்களைப் பயன்படுத்துதல், கப்பலில் சுழலும் இயந்திரத்தில் பாதுகாப்புக் கலனைப் பொருத்துதல் ஆகியவை இந்த கங்கை நதி டால்பின்களைப் பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகளாகும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்