கங்கை திட்டம் - கின்னஸ் உலகச் சாதனை
November 5 , 2021
1388 days
507
- கங்கை உத்சவத்தின் முதல் நாளில் (நதித் திருவிழா 2021) தேசியத் துாய்மை கங்கை நதித் திட்டமானது கின்னஸ் உலக சாதனையில் இடம் பெற்றுள்ளது.
- அதிகளவில் கையால் எழுதப்பட்ட குறிப்புகளின் புகைப்படங்கள் ஒரு மணிநேரத்தில் பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டதன் காரணமாக இது கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றது.
- கங்கை உத்சவ் நிகழ்ச்சியானது கங்கைப் புனரமைப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அந்த நிகழ்விற்கு ஒரு உத்வேகம் அளிக்கவும் ஏற்பாடு செய்யப் பட்டது.
குறிப்பு
- 5வது கங்கை உத்சவ் நிகழ்ச்சியானது வேடிக்கை மற்றும் விழாக்களுடன் காணொளி வாயிலாக தொடங்கியது.
- இந்த ஆண்டு நவம்பர் 01 முதல் 03 வரையில் கங்கை உத்சவ் கொண்டாடப் பட்டது.
- எடுத்துக்காட்டாக பிரயாக்ராஜ் பகுதியில், இது கங்கை மற்றும் யமுனை நதிகள் சங்கமிக்கும் இடத்தில் கொண்டாடப் படுகிறது.
- உஜ்ஜைன் பகுதியில் இது சிப்ரா நதிக்கரையில் கொண்டாடப் படுகிறது.

Post Views:
507