கங்கை நதிக் கரையை ஒட்டியுள்ள நகரங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை
December 17 , 2017 2757 days 1026 0
தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஹரித்துவார் மற்றும் ரிஷிகேஷ் போன்ற கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள நகரங்களில் பிளாஸ்டிக்காலான பைகள், தட்டுகள் மற்றும் கருவிகளை பயன்படுத்த முழுமையாகத் தடை விதித்துள்ளது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத் தலைவர் சுவதந்திர குமார் தலைமையிலான அமர்வு உத்தர காசி வரை இத்தகைய பிளாஸ்டிக் பொருட்களின் விற்பனை, உற்பத்தி மற்றும் சேமிப்பு கிடங்குகளை தடை செய்துள்ளது.
பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவு பசுமைப் போராளி C.மேத்தா என்பவரது வழக்கை விசாரிக்கும் சமயத்தில் வந்தது.