TNPSC Thervupettagam

கங்கை நீர்ப் பகிர்வு குறித்த இருதரப்புப் பேச்சுவார்த்தைகள்

January 6 , 2026 13 hrs 0 min 44 0
  • இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகள் ஆனது 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் காலாவதியாக உள்ள கங்கை நீர்ப் பகிர்வு ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்காக பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளன.
  • ஃபராக்கா தடுப்பணையில் வறண்ட பருவ காலங்களில் கங்கையின் நீரைப் பகிர்ந்து கொள்வதற்காக இந்த ஒப்பந்தம் முதலில் 1996 ஆம் ஆண்டில் கையெழுத்தானது.
  • மே 31 ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு ஒருமுறை கங்கை மற்றும் பத்மா நதிகளில் கூட்டு நீர் அளவீடுகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
  • இந்திய-வங்காளதேச கூட்டு நதி ஆணையம் ஆனது இரு நாடுகளுக்கும் இடையிலான நீர்ப் பகிர்வு விவகாரங்களை ஒருங்கிணைக்கிறது.
  • இந்தியாவும் வங்காளதேசமும் 54 எல்லை தாண்டிய ஆறுகளைப் பகிர்ந்து கொள்கின்றன என்பதோடு ஃபரக்கா தடுப்பணை 1975 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.
  • அதிகரித்து வரும் நீர் நெருக்கடிக்கு மத்தியில் உள்நாட்டு நீர் தேவைகளைப் பிராந்திய ஒத்துழைப்புடன் சமநிலைப்படுத்துவதே இந்தப் பேச்சுவார்த்தைகளின் நோக்கம் ஆகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்