தசரா, தீபாவளி, சரஸ்வதி பூஜை உள்ளிட்ட பண்டிகைகளின் போது கங்கை அல்லது அதன் துணை நதிகளில் சிலைகளைக் கரைப்பதற்குத் தூய்மையான கங்கை நதிக்கான தேசியத் திட்டம் (National Mission for Clean Ganga - NMCG) தடை விதித்துள்ளது.
இந்த உத்தரவானது சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986 இன் பிரிவு 5ன் கீழ் பிறப்பிக்கப் பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறுபவர்கள் ரூ 50,000ஐ மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அபராதமாகச் செலுத்த வேண்டும்.
இந்த 11 கங்கை வடிநில மாநிலங்களில் மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட இருக்கின்றன.