7வது இந்தியத் தொழில்துறை நீர்வள மாநாடு மற்றும் 9வது FICCI நீர்வள விருதுகளின் ‘சிறப்பு சான்றாய (ஜூரி) விருதானது’ கங்கையைத் தூய்மைப்படுத்துவதற்கான தேசியத் திட்டத்திற்கு (NMCG - National Mission for Clean Ganga) வழங்கப்பட்டுள்ளது.
கங்கை நதியைப் புதுப்பித்தல், நீர் மேலாண்மையில் முன்னுதாரண மிக்க மாற்றத்தை ஏற்படுத்திய முயற்சிக்காக கங்கையைத் தூய்மைப்படுத்துவதற்கான ஒரு தேசியத் திட்டத்திற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
கங்கையைத் தூய்மைப்படுத்துவதற்கான தேசியத் திட்டத்தின் புதிய தலைமை இயக்குநராக G. அசோக் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.