அசாமில் உள்ள காசிரங்கா தேசியப் பூங்காவில் 2023 ஆம் ஆண்டு கஜ உத்சவ் என்ற நிகழ்வினைக் கொண்டாடச் செய்வதற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
யானைகள் வளங்காப்புத் திட்டப்பணியின் 30 ஆண்டுகால வெற்றிகரமான நிறைவினை நினைவு கூருவதனையும், அவற்றின் வளங்காப்பு முயற்சிகளுக்கு மேலும் உத்வேகம் அளிப்பதனையும் இது நோக்கமாக உள்ளது.
யானைகள் வளங்காப்புத் திட்டம் என்பது மத்திய அரசின் நிதியுதவி பெறும் திட்டம் ஆகும்.
இந்தத் திட்டமானது யானைகள், அவற்றின் வாழ்விடங்கள் மற்றும் வழித்தடங்கள் ஆகியவற்றின் பாதுகாப்பிற்காக 1992 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கப் பட்டது.