இந்தியத் தேசிய கலை மற்றும் கலாச்சாரப் பாரம்பரிய அறக்கட்டளை (INTACH), ஆசியாவில் கஜா-லோக்: யானைகளின் நிலங்கள் மற்றும் அவற்றின் கலாச்சார சின்னங்கள் என்ற முன்னெடுப்பினை அறிமுகப்படுத்தியது.
இந்த முன்னெடுப்பு யானைகள் வாழும் நாடுகளில் ஆசிய யானையின் கலாச்சார, வரலாற்று, சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை தகவமைப்பு அம்சங்களை ஆவணப் படுத்துகிறது.
ஆசியாவில் யானை தொடர்பான பாரம்பரியம் மற்றும் வளங்காப்பிற்கான பன்னாட்டு அங்கீகாரத்தை ஊக்குவிப்பதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டு உள்ளது.