2026 ஆம் ஆண்டிற்கான கஜ் கௌரவ் விருதுகள் ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப் பட்டினத்தில் உலக யானைகள் தினக் கொண்டாட்டங்களின் போது 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 அன்று வழங்கப்பட்டன.
மேற்கு வங்காளத்தின் ஜல்தாபாரா தேசியப் பூங்காவைச் சேர்ந்த ஏழு யானைப் பாகன்களுக்கு யானை மற்றும் வனவிலங்கு மீட்புப் பணிகளுக்காக இந்த விருதுகள் வழங்கப் பட்டன.
கடும் வெள்ளத்தின் போது சிக்கித் தவித்த வளர்ப்பு யானைகள் 6-ஐ பிகாஷ் காரியா மற்றும் ராஜீவ் ஓரோன் ஆகியோர் மீட்டனர்.
அஜிபுல் ஹக், அஜித் கபூர், மும்தாஜ் ஆலம், அமசூர் காரியா மற்றும் திலீப் முண்டா ஆகியோர் இடம் பெயர்ந்த 13 காண்டாமிருகங்களைப் பாதுகாப்பாக வழிநடத்தினர்.
சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், யானைகள் பாதுகாப்புத் திட்டத்தின் (2020-2026) கீழ் 30 சாதனைகளை உள்ளடக்கிய “30 Giant Steps” என்ற நூலை வெளியிட்டது.
கர்நாடகா, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் மனித-யானை மோதலை நிர்வகிக்க ₹500 கோடி மதிப்பிலான பிராந்திய செயல்திட்டம் தொடங்கப் பட்டது.