கஞ்சா கச்சிபௌலி வனப்பகுதி தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் கருத்து
April 20 , 2025 131 days 124 0
100 ஏக்கர் பரப்பிலான கஞ்சா கச்சிபௌலி "வனப்" பகுதி அழிக்கப்பட்டதால் பாதிக்கப் பட்ட வனவிலங்குகளைப் பாதுகாக்க வேண்டி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தெலங்கானா வனவிலங்குக் காப்பாளருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தப் பகுதியில் இனிமேல் ஒரு மரத்தைக் கூட வெட்டக்கூடாது என்று தெலங்கானா அரசுக்கு உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்றமானது வேலைவாய்ப்பு மற்றும் மேம்பாட்டினை விரும்புகிறது. ஆனால் அது சுற்றுச்சூழலை அழித்து உருவாக்கப்படக் கூடாது என்று கருத்து தெரிவித்துள்ளது என்று நீதிபதி கவாய் தெரிவித்தார்.
முன்னதாக, இந்த கஞ்சா கச்சிபௌலி ஆனது 1980 ஆம் ஆண்டு வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 'காடுகள்' பிரிவின் கீழ் உள்ளதாக மனுதாரர்கள் கூறியிருந்தனர்.