கடனை முன்கூட்டியே செலுத்துவது மீதான கட்டணங்கள் நீக்கம்
- இந்திய ரிசர்வ் வங்கியானது, வணிகக் கடன்களில் முன்கூட்டியே செலுத்துவது மீதான கட்டண முறைகளை நிறுத்துவதற்காக புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.
- தனிநபர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கான (MSE) மாற்று விகிதக் கடன்களுக்கு இந்த விதிகள் பொருந்தும்.
- இந்த மாற்றங்கள் ஆனது 2026 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.
- கடன்கள் முன்கூட்டியே செலுத்தப்பட்டால் வங்கிகள் மற்றும் NBFC நிறுவனங்கள் இனி கட்டணம் வசூலிக்க முடியாது.
- முன்னதாக, வணிகம் அல்லாத தனிநபர் கடன்களுக்கு மட்டுமே கடனை முன்கூட்டியே செலுத்தும் அபராதங்கள் விதிக்கப்படாமல் இருந்தது.
- இது வங்கிகள், NBFC மற்றும் பெரிய நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளை உள்ளடக்கியது.

Post Views:
50