கடன் அட்டைகள் மூலம் UPI பணம் செலுத்த அனுமதித்த முதல் அரசு வங்கி
July 3 , 2023 782 days 502 0
RuPay கடன் அட்டை மூலம் வணிகர்களுக்கு UPI (Unified Payments Interface) கட்டணங்களை வழங்கும் இந்தியாவின் முதலாவது பொதுத் துறை வங்கியாக கனரா வங்கி மாறியுள்ளது.
இந்தப் புதிய அம்சமானது வங்கியின் பிரபலமான "கனரா ஏஐ1"(Canara ai1) என்ற ஒரு செயலியில் கிடைக்கிறது.
இந்த வசதியை அறிமுகப்படுத்த NPCI (National Payments Corporation of India) அமைப்புடன் அந்த வங்கியானது கூட்டு சேர்ந்துள்ளது.
இது கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் RuPay கடன் அட்டையினைப் பயன்படுத்தி அதன் மூலம் வணிகர்களுக்கு விரைவான மற்றும் தடையின்றிப் பணம் செலுத்த உதவுவதோடு அது அவர்களுக்கு அதிக நெகிழ்வுத் தன்மையையும் பெரும் வசதியையும் வழங்குகிறது.
இந்தக் கூட்டு முயற்சியானது கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பு, பத்திரம் மற்றும் வசதியானக் கட்டணப் பரிவர்த்தனைகளை வழங்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
RuPay கடன் அட்டைகள் மூலம் UPI வசதியினை அறிமுகம் செய்வதன் வாயிலாக வங்கி வாடிக்கையாளர்களுக்கும் வணிகர்களுக்கும் இது பல புதிய வாய்ப்புகளை அளித்து, கடன் சுற்றுச்சூழலில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும்.