TNPSC Thervupettagam

கடன் குறித்த புதிய செவில்லா மன்றம்

October 29 , 2025 2 days 18 0
  • கடன் குறித்த புதிய செவில்லா மன்றம் என்பது ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு மாநாடு (UNCTAD) மற்றும் ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத் துறை (UN DESA) ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் ஒரு ஸ்பெயின் தலைமையிலான பலதரப்புத் தளமாகும்.
  • இது ஜெனீவாவில் நடைபெற்ற 16வது UNCTAD மாநாட்டில் செவில்லா செயல்பாட்டுத் தளத்தின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்டது.
  • இந்த மன்றம் இறையாண்மை கடன் நெருக்கடிகளுக்கு நியாயமான, வெளிப்படையான மற்றும் நிலையான தீர்வுகளை ஊக்குவிக்கிறது.
  • பொறுப்பான கடன் வாங்குதல் மற்றும் கடன் வழங்கும் நடைமுறைகளை வலுப் படுத்த அரசாங்கங்கள், கடன் வழங்குநர்கள், உரிமையியல் சமூகம் மற்றும் நிபுணர்களை இது உள்ளடக்கியது.
  • இந்த மன்றமானது கணிக்கக் கூடிய கடன் மேலாண்மைக்குத் தொழில்நுட்ப ஆதரவை வழங்குகிறது மற்றும் செவில்லாவில் ஒப்புக் கொள்ளப் பட்ட கடன் சார் முன்னெடுப்புகளைச் செயல்படுத்துவதை கண்காணிக்கிறது.
  • இது வடக்கு-தெற்கு நாடுகளின் ஒத்துழைப்பை மேம்படுத்துகிறது மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் நியாயமான கடன் நிர்வாகத்திற்கான முறையான சீர் திருத்தங்களை மேம்படுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்