கடன்/பற்று அட்டைகளின் நிறுவனத்தை மாற்றிக் கொள்ளும் அம்சம்
July 21 , 2023 767 days 387 0
இந்திய ரிசர்வ் வங்கியானது பற்று அட்டை, கடன் அட்டை மற்றும் முன்கூட்டிய பண மதிப்பு வழங்கப்பட்ட வகையிலான அட்டைதாரர்கள் தாங்கள் விரும்பும் நிறுவனத்தினை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தினை வழங்கும் ஒரு வரைவு ஒழுங்கு முறையினை வெளியிட்டுள்ளது.
நுகர்வோர் விரும்பும் வலையமைப்புச் சார்ந்த ஒரு அட்டையைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரமானது உலகளவிலானப் புரட்சிகரமான வளர்ச்சியைக் குறிக்கிறது.
வலையமைப்பு அட்டை விருப்பத் தேர்வுகளானது அதனை வழங்குபவர்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் மூலம் அது முன்னரே தீர்மானிக்கப் படுகின்ற தற்போதுள்ள நடைமுறையை இந்த ஒழுங்குமுறை மாற்றியமைக்கிறது.
அதாவது தனது தொலைபேசி எண்ணைத் தக்க வைத்தவாறே ஒருவர் தொலைபேசி சேவை வழங்குநர் அமைப்புகளை மாற்றுவதைப் போலவே, வங்கிப் பயனர்களும் தங்கள் அட்டை நிறுவனத்தினை மாற்றிக் கொள்ளலாம்.
இந்த அம்சமானது, அட்டையில் மேற்கொள்ளப்படும் பரிமாற்றங்கள், தொகை இருப்புக்கள் மற்றும் கடன் பெறல் நிலவரம் ஆகியவற்றின் தகவல்களைக் காத்து வைத்திருக்க உதவும்.