கடன் வழங்கீடுகளின் எண்ணிக்கை உயர்வின் அடிப்படையில் சிறந்த செயல் திறன் கொண்ட வங்கி
February 23 , 2023 872 days 423 0
2022-23 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் கடன் வழங்கீடுகளின் சதவீதத்தின் அடிப்படையில், பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா அரசுக்குச் சொந்தமான கடன் வழங்கு நிறுவனங்களிடையே சிறந்த செயல்திறன் கொண்ட வங்கியாக உருவெடுத்துள்ளது.
இந்தக் கடன் வழங்கு நிறுவனமானது 21.67 சதவீத மொத்தக் கடன் வழங்கீட்டில் அதிக அளவில் வருடாந்திர உயர்வினைக் கண்டது.
19.80% உயர்வினைக் கொண்ட யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கிக்கு அடுத்த படியாக இரண்டாவது இடத்தைப் பெற்றது.
பாரத் ஸ்டேட் வங்கியானது (SBI) 16.91% கடன் வழங்கீட்டு அதிகரிப்புடன் நான்காவது இடத்தைப் பெற்றது.