கடம் மேஸ்ட்ரோ T.H.விநாயக்ராம் அவர்களுக்கு சிறப்பு வாழ்நாள் சாதனையாளர் விருது
July 9 , 2018 2562 days 822 0
‘விக்கு’ விநாயக்ராம் என்றறியப்படும் கடம் மேஸ்ட்ரோ H.விநாயக்ராம் அவர்களுக்கு சிறப்பு வாழ்நாள் சாதனையாளர் விருது அளிக்கப்பட உள்ளதாக இசைச் சங்கம் (அகாடமி) அறிவித்துள்ளது.
இந்த விருதானது நிறுவனத்தின் வருடாந்திர அங்கீகரிப்பு மற்றும் மரியாதை அளித்தல் ஆகியவற்றின் கீழ் வராது.
இந்த விருதானது எப்பொழுதாவது ஒரு முறை, தனிப்பட்ட அங்கீகாரத்திற்குத் தகுதியுடையவராக இசை (அகாடமி) சங்கத்தினால் உணரப்பட்ட முதன்மையான திறமையுடைய கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது.
இவர் ஏற்கெனவே அச்சங்கத்தின் சங்கீத கலா ஆச்சார்யா விருதினைப் பெற்றுள்ளார்.
ஆரம்பத்தில் இந்த விருதினைப் பெற்றவர்கள் நடன கலைஞர் கமலா லக்ஷ்மி நாராயணன் மற்றும் வயலின் வித்வான் லால்குடிஜெயராமன் ஆகியோர் ஆவர்.