கடற்கரைப் பகுதிகளில் அணுசார் கனிமங்கள் எடுக்கும் உரிமை விதிகள், 2025
July 25 , 2025 14 hrs 0 min 31 0
புதிய விதிகளானது, 2002 ஆம் ஆண்டு கடற்கரைப் பகுதிகள் கனிம (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளன.
சுரங்கத் துறை அமைச்சகமானது, அணுசக்தித் துறையுடன் ஒருங்கிணைந்து இந்த விதியை அறிவித்தது.
அணுசார் கனிமங்களின் செறிவு ஒரு குறிப்பிட்ட மற்றும் குறைந்தபட்ச அளவை விட அதிகமாக இருந்தால் மட்டுமே இந்த விதிகள் பொருந்தும்.
அணுசக்தித் துறை மற்றும் அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் (AERB) ஆகியவை இதற்கான முதன்மை மேற்பார்வை நிறுவனங்களாகச் செயல்படும்.
மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்களின் கீழ் சார்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப் படாவிட்டால், பாதுகாப்பு, உள்துறை மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு மத்திய அமைச்சகங்களின் முன் பாதுகாப்பு அனுமதியுடன் மட்டுமே நேரடி பங்கேற்பிலிருந்து வெளிநாட்டு நிறுவனங்கள் தடை செய்யப் பட்டுள்ளன.
விதிகளின் கீழ், அறிவிக்கப்பட்ட அரசு நிறுவனங்களுக்கு மட்டும் உரிமம் இல்லாமல் ஆய்வு அனுமதிக்கப் படும்.
2016 ஆம் ஆண்டு அணுசார் கனிமச் சலுகை விதிகளுக்கு இணங்க வரையறுக்கப் பட்டுள்ளபடி, வரம்பு சார்ந்தத் தரங்களுக்கு மேல் பின்னர் கண்டறியப்படும் அணுசார் கனிமங்கள் குறித்து உடனடியாக அணு சார் கனிமங்கள் ஆய்வு மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்திற்கு (AMD) தெரிவிக்கப்பட வேண்டும்.
ஆய்வு மற்றும் உற்பத்தித் திட்டங்கள் ஆனது , "2024 ஆம் ஆண்டு கடற்கரைப் பகுதி கனிம வளங்காப்பு மற்றும் மேம்பாட்டு விதிகளுக்கு" இணங்க வேண்டும்.
இந்தியாவில் யுரேனியம் குறைவாகவே இருந்தாலும் தோரியத்தின் மிகப்பெரிய வளம் காணப்படுகிறது.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான யுரேனியம் இருப்புகள் உலகின் முன்னணி யுரேனியம் உற்பத்தி செய்யும் நாடுகளுடன் ஒப்பிடும் போது சிறியதாகவும் மிகவும் குறைந்த தரத்திலும் உள்ளன.
கேரளா மற்றும் ஒரிசாவின் கடற்கரை மணல்களில் மோனசைட் வளங்கள் நிறைந்து உள்ளன.