கடற்கொள்ளைக்கு எதிரான மையத்தின் தலைமையிடம் மாற்றம் - ஐரோப்பிய யூனியன்
August 3 , 2018 2652 days 821 0
கடற்கொள்ளைக்கு எதிரான அட்லாண்டா ரோந்து மையத்தின் தலைமையகத்தை லண்டனிலிருந்து ஸ்பெயின் துறைமுகத்திற்கு மாற்ற ஐரோப்பிய யூனியன் நாடுகள் முடிவு செய்துள்ளன. இந்தத் தலைமையிட மாற்றம் 2019 மார்ச் 29 அன்று நடைபெறவிருக்கிறது.
லண்டனை மையமாகக் கொண்டு ஆப்பிரிக்காவின் கொம்பு பகுதியில் செயல்படும் கடல்சார் பாதுகாப்பு மையம் (Maritime Secuirty Centre Horn of Africa) ஆனது கடற்பயணத்தின் போது சோமாலியாவிலிருந்து ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து தெரிவிக்கும் மையம் ஆகும். இந்த மையத்தின் தலைமையிடமும் பிரான்சு துறைமுகமான பிரெஸ்டிற்கு மாற்றப்படவிருக்கிறது.
2009ஆம் ஆண்டில் ஸ்பெயின் கப்பல் கடத்தப்பட்டது உள்பட சோமாலியக் கடலோரப் பகுதிகளில் நடைபெறும் கடுமையான கடற்கொள்ளைகளை எதிர்த்து போராடுவதற்காக அட்லாண்டாவை 2008ஆம் ஆண்டு ஐரோப்பிய யூனியன் அமைத்தது.