அபுதாபியில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு IUCN உலகப் பாதுகாப்பு மாநாடு ஆனது இந்தியாவின் கடற்பசு வளங்காப்பகத்தினை அங்கீகரிக்கும் ஒரு தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது.
கடல்சார் வளங்காப்பை மேம்படுத்துவதற்கு இந்திய அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒத்துழைப்பினை மேற்கொள்வதற்கு IUCN வலியுறுத்தியது.
இந்தியாவின் முதல் கடற்பசு வளங்காப்பகம் தமிழ்நாட்டின் பாக் விரிகுடாவில் அமைந்துள்ளது.
இந்த வளங்காப்பகம் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் தேதியன்று 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின கீழ் நிறுவப்பட்டது.
கடற்பசு வளங்காப்பகம் வடக்கு பாக் விரிகுடாவில் 448.34 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இது கடற்பசுக்களுக்கு உணவளிக்கும் இடமாகச் செயல்படும் 12,250 ஹெக்டேர் பரப்பளவிலான கடல் புல்வெளிகளைப் பாதுகாக்கிறது.
கடற்பசுக்கள் (டுகோங் டுகோன்) ஆனது IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் அருகும் அபாயத்தில் உள்ள இனங்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.