கடற்படை நிறுவனத்திற்கு குடியரசுத் தலைவரின் வண்ணம் – கௌரவம்
November 22 , 2019 2090 days 688 0
இந்திய ஆயுதப் படைகளின் தலைமைப் படைத் தளபதியும் இந்தியக் குடியரசுத் தலைவருமான ராம்நாத் கோவிந்த் கேரளாவின் கொச்சியின் எலிமலையில் உள்ள இந்தியக் கடற்படை நிறுவனத்திற்கு (Indian Naval Academy - INA) குடியரசுத் தலைவரின் வண்ணம் என்ற கௌரவப் பட்டத்தை வழங்கினார்.
குடியரசுத் தலைவரின் வண்ணம் என்பது ஒரு இராணுவப் பிரிவிற்கு வழங்கப்படும் மிக உயர்ந்த கௌரவப் பட்டமாகும்.
கோவா, கொச்சி மற்றும் எலிமலை ஆகிய மூன்று வெவ்வேறு இடங்களில் கடந்த 50 ஆண்டுகளாக இந்தியக் கடற்படை அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிப்பதில் மற்றும் அவர்களைக் கட்டமைப்பதில் அந்நிறுவனம் ஆற்றிய சிறந்த சேவையை அங்கீகரிக்கும் விதமாக இந்தப் பட்டம் INAக்கு வழங்கப் பட்டுள்ளது.