ஆண்டிற்கு இரண்டு முறை நடைபெறும் 2025 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது கடற்படைத் தளபதிகள் மாநாடானது புது டெல்லியின் நௌசேனா பவனில் நடைபெற்றது.
செயல்பாட்டுத் தயார்நிலை, கடல்சார் பாதுகாப்பு, திறன் மேம்பாடு மற்றும் முப்படை ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் இந்த மாநாடு கவனம் செலுத்தியது.
கடற்படை ஆயுதச் சேவைக்கான விதிமுறைகள், அரசாங்க இணையச் சந்தை (GeM) குறிப்பேடு மற்றும் வெளிநாட்டு ஒத்துழைப்புச் செயல் திட்டம் உட்பட ஐந்து கடற்படை அறிக்கை வெளியீடுகள் இதில் வெளியிடப்பட்டன.
கடற்படை ஆராய்ச்சி மற்றும் அறிவுசார் பணிகளின் தொகுப்பாக ஒருங்கிணைந்த அறிவுத் திறனுக்கான கடற்படை அறிவுசார் வலை தளமும் (NIPUN) தொடங்கப்பட்டது.
சாகர் மாந்தன் நிகழ்வு ஆனது சமகால கடல்சார் மற்றும் பாதுகாப்பு துறை பிரச்சினைகள் குறித்து விவாதித்தது.