விக்ரஹா எனப்படும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஒரு கடலோரக் காவற்படைக் கப்பலினைப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தமிழகத்தில் சென்னையில் தொடங்கி வைத்தார்.
இந்த 98 மீட்டர் நீளம் கொண்ட கப்பலானது ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப் பட்டினத்தில் (வைசாக்) பணியமர்த்தப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இந்தக் கப்பலானது லார்சன் & டியூப்ரோ என்ற ஒரு கப்பல் கட்டும் நிறுவனத்தினால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்டது.