கடலோர மாநிலங்களில் காலநிலையைத் தாங்கக் கூடிய தன்மை – UNFCCC
November 20 , 2019 2092 days 722 0
காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் கட்டமைப்பு ஒப்பந்தத்தின் (United Nations Framework Convention on Climate Change - UNFCCC) கட்டமைப்பிற்குள் நிறுவப்பட்ட பசுமைக் காலநிலை நிதியத்தின் கீழ், இந்தியா 43 மில்லியன் அமெரிக்க டாலர்களைப் பெற்றுள்ளது.
இந்தத் திட்டமானது ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா ஆகிய மூன்று கடலோர மாநிலங்களில் செயல்படுத்தப்பட இருக்கின்றது.
இந்த நிதி பின்வருவனவற்றிற்குப் பயன்படுத்தப்பட இருக்கின்றது.
1.7 மில்லியன் மக்களுக்கு காலநிலையைத் தாங்கக் கூடிய வாழ்க்கை முறையைக் கட்டமைத்தல்,
3.5 மில்லியன் டன்கள் எடை கொண்ட கார்பனை ஈடு செய்தல்,
பாதிப்பிற்கு உள்ளாகக் கூடிய சூழல் மண்டலங்களைப் பாதுகாத்தல்,
மேம்படுத்தப்பட்ட கடற்கரைப் பாதுகாப்புடன் 10 மில்லியன் மக்களுக்குப் பயனளித்தல்.
இந்தத் திட்டமானது காலநிலை மாற்றம் தொடர்பான தேசிய செயல் திட்டம், மாநில செயல் திட்டங்கள் மற்றும் பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகள் ஆகியவற்றுடன் ஒன்றிப் பொருந்துகின்றது.