TNPSC Thervupettagam

கடலோர மாநிலங்களில் காலநிலையைத் தாங்கக் கூடிய தன்மை – UNFCCC

November 20 , 2019 2090 days 717 0
  • காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் கட்டமைப்பு ஒப்பந்தத்தின் (United Nations Framework Convention on Climate Change - UNFCCC) கட்டமைப்பிற்குள் நிறுவப்பட்ட பசுமைக் காலநிலை நிதியத்தின் கீழ், இந்தியா 43 மில்லியன் அமெரிக்க டாலர்களைப் பெற்றுள்ளது.
  • இந்தத் திட்டமானது ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா ஆகிய மூன்று கடலோர மாநிலங்களில் செயல்படுத்தப்பட இருக்கின்றது.
  • இந்த நிதி பின்வருவனவற்றிற்குப் பயன்படுத்தப்பட இருக்கின்றது.
    • 1.7 மில்லியன் மக்களுக்கு காலநிலையைத் தாங்கக் கூடிய வாழ்க்கை முறையைக் கட்டமைத்தல்,
    • 3.5 மில்லியன் டன்கள் எடை கொண்ட கார்பனை ஈடு செய்தல்,
    • பாதிப்பிற்கு உள்ளாகக் கூடிய சூழல் மண்டலங்களைப் பாதுகாத்தல்,
    • மேம்படுத்தப்பட்ட கடற்கரைப் பாதுகாப்புடன் 10 மில்லியன் மக்களுக்குப் பயனளித்தல்.
  • இந்தத் திட்டமானது காலநிலை மாற்றம் தொடர்பான தேசிய செயல் திட்டம், மாநில செயல் திட்டங்கள் மற்றும் பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகள் ஆகியவற்றுடன் ஒன்றிப் பொருந்துகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்