2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 07 ஆம் தேதியன்று, மாநிலங்களவையானது 2025 ஆம் ஆண்டு கடலோரக் கப்பல் போக்குவரத்து மசோதாவினை நிறைவேற்றியது.
இந்த மசோதா இந்தியாவின் கடலோரக் கப்பல் போக்குவரத்தை நவீன மயம் ஆக்குவதையும், அதன் 11,098 கிலோ மீட்டர் நீளக் கடற்கரையின் திறனைத் வெளிக் கொணர்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது 1958 ஆம் ஆண்டு வணிகக் கப்பல் போக்குவரத்துச் சட்டத்தின் XIV ஆம் பகுதிக்கு மாற்றாக அமைகிறது என்பதோடு மேலும் உலகளாவியக் கடற்கரை வணிக விதிமுறைகளுடன் ஒத்துப் போகிறது.
இந்த மசோதா, கடலோர வர்த்தகத்தில் ஈடுபடும் வெளிநாட்டு கப்பல்களுக்கு உரிமம் வழங்குவதை எளிதாக்குகிறது மற்றும் ஒழுங்குபடுத்துகிறது.
மேலும், 2030 ஆம் ஆண்டிற்குள் கடலோர சரக்குப் போக்குவரத்துகளை 230 மில்லியன் மெட்ரிக் டன்களாக உயர்த்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது ஒரு தேசியக் கடலோர மற்றும் உள்நாட்டுக் கப்பல் போக்குவரத்து உத்திசார் திட்டத்தை உருவாக்குவதை வலியுறுத்துகிறது.
வெளிப்படைத்தன்மை மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக நிகழ்நேரக் கப்பல் தரவுகளுக்கான தேசியத் தரவுத் தளத்தினை இந்த மசோதா உருவாக்குகிறது.
இந்த மசோதாவானது, 2025 ஆம் ஆண்டு வணிகக் கப்பல் மசோதா மற்றும் 2025 ஆம் ஆண்டு கடல் வழியாக சரக்குகளை எடுத்துச் செல்வதற்கான மசோதா ஆகியவற்றுடன் சேர்ந்து, முக்கிய கடல்சார் சீர்திருத்தங்களை நிறைவு செய்கிறது.