TNPSC Thervupettagam

கடலோரப் பேரழிவு அபாயக் குறைப்பு மற்றும் தாங்குந்தன்மை பற்றிய முதலாவது தேசிய மாநாடு – 2020

February 28 , 2020 1890 days 754 0
  • 2020 ஆம் ஆண்டின் கடலோரப் பேரழிவு அபாயக் குறைப்பு மற்றும் தாங்குந்தன்மை பற்றிய முதலாவது தேசிய மாநாட்டிற்கு (Coastal Disaster Risk Reduction and Resilience - CDRR&R) மத்திய உள்துறை இணை அமைச்சரான நித்யானந்த் ராய் என்பவர் தலைமை தாங்கினார்.
  • இது புது தில்லியில் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தால் (National Institute of Disaster Management - NIDM) ஏற்பாடு செய்யப்பட்டது.
  • இந்தத் துறையின் மிக சமீபத்திய முன்னேற்றங்களை ஆராய்ந்து விவாதிப்பதும் கடலோரப் பேரழிவு அபாயக் குறைப்பு மற்றும் தாங்குந்தன்மைக்கான பல்வேறு அம்சங்களில் உள்ள சிக்கல்கள் மற்றும் தீர்வுகள் பற்றிய புரிதலை மேம்படுத்துவதும் இந்த மாநாட்டின் நோக்கமாகும்.
  • இது பிரதமரின் 10 அம்சத் செயல் திட்டம் மற்றும் பேரழிவு அபாயக் குறைப்புக்கான செண்டாய் கட்டமைப்பைச் செயல்படுத்துவதன் மூலம், கடலோரப் பேரழிவு அபாயங்கள் மற்றும் திறனுள்ள ஒத்துழைப்பு நடவடிக்கைகள் பற்றிய சிறந்த புரிதலின் அடிப்படையில் மனிதத் திறனை மேம்படுத்துவதின் மீது கவனம் செலுத்தியது.
  • 2016 ஆம் ஆண்டில் பேரிடர் அபாயக் குறைப்பு தொடர்பான ஆசிய அமைச்சர்களுக்கிடையேயான மாநாட்டில் (AMCDRR - Asian Ministerial Conference on Disaster Risk Reduction) 10 அம்ச செயல் திட்டத்தை பிரதமர் பட்டியலிட்டிருந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்